எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 03 ஆம் கட்டைப் பிரதேசத்தில் அமைந்துள்ள புஞ்சி ஸ்ரீபாத மலையைப் பார்வையிட வந்த பிரித்தானியப் பெண் ஒருவர் இன்று (18) பிற்பகல் 100 அடி உயரமான பள்ளத்தில் வீழ்ந்துள்ளார்.
விபத்துக்குள்ளான இந்த வெளிநாட்டுப் பெண்ணை, பிரதேசத்திலுள்ள ஒரு ஹோட்டலின் உதவியுடன் அமைக்கப்பட்ட மீட்புக் குழுவினர் பெரும் சிரமத்தின் மத்தியில் மீட்டுள்ளனர்.
பள்ளத்திலிருந்து மேலே கொண்டுவரப்பட்ட அவர், உடனடியாக 1990 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
News