இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜீவன் தொண்டமான் விலகல்

news_20251218163044

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்படும் அவர், இது தொடர்பாக கட்சியின் தேசிய சபையை கூட்டுமாறு பல உப தலைவர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.




இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. செந்தில் தொண்டமான் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடலின் போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களாக செயற்படும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு, அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு எழுத்து மூலம் அறிவிக்குமாறு ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




எவ்வாறாயினும், தேசிய சபையை கூட்டுமாறு பொதுச்செயலாளர் தொலைபேசி மூலம் அறிவித்த போதிலும், அந்த கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அறிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

news_20251218163044

கருத்துரையிடுக

புதியது பழையவை