பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறும், அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தி இன்று யாழ்ப்பாண நகர மத்தியில் விசேட ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லலித் மற்றும் குகன் ஆகிய செயற்பாட்டாளர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராவதை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரித்தமையும், நீதிமன்றத்திற்கு வருவதைத் தவிர்த்தமையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டது.
அரசாங்கம் இதில் தலையிட்டு உடனடியாக நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு வலியுறுத்தினர். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சமூக உரிமைகள் இயக்கமும், தெற்கிலிருந்து வந்த சிங்கள சிவில் செயற்பாட்டாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.