சமித்ரி ரம்புக்கவெல்ல கைது செய்யப்பட்டார்

chamitri-rambukwella-arrested

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளும், நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் இரண்டாம் செயலாளராக இருந்தவருமான சமித்ரி ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 இலட்சம் ரூபாவை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் இந்த கைது 2026 பெப்ரவரி 06 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.




இந்த விசாரணைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் கண்காணிக்கப்பட்டதன் பின்னர், ரம்புக்வெல்ல குடும்ப உறுப்பினர்கள் பலரின் சொத்துக்களை முடக்க முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மேலதிகமாக, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி ஏப்பா விஹேன, மகள்களான சமித்ரி ஜயனிக்கா, சந்திரானி பமாலி மற்றும் அமாலி நயனிக்கா மற்றும் மருமகன் இசுரு புலஸ்தி பண்டார ஆகியோரின் பெயர்களில் உள்ள 16 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதி பத்திரங்களை இடைநிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணை நடத்தப்படும் விதம் குறித்து நீதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்தார். அதன்படி, சட்டத்தரணிகள் மற்றும் சட்ட மாணவர்கள் தவிர்ந்த நீதிமன்ற மண்டபத்தில் இருந்த ஏனைய அனைத்து நபர்களையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது, ரம்புக்வெல்ல குடும்ப உறுப்பினர்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாவது, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் தமது கட்சிக்காரர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால், அந்த தடையை நீக்குமாறு கோரினர்.




எவ்வாறாயினும், பிரதிவாதி தரப்பின் அந்த கோரிக்கைக்கு எதிராக, இலஞ்ச ஆணைக்குழு சார்பில் ஆஜரான உதவிப் பணிப்பாளர் சட்டத்தரணி துசிதா ஜயநெத்தி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் சமித்ரி ரம்புக்வெல்ல உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். முன்னாள் அமைச்சரின் சம்பவங்களுக்கு இணையாக, அவரது குடும்ப உறுப்பினர்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

Post a Comment

Previous Post Next Post