வரலாற்றில் முதல் முறையாக இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் பஸ் நடத்துனர்கள் நியமிக்கப்படுகின்றனர்

for-the-first-time-in-history-female-bus-conductors-will-be-appointed-at-langama

இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, முதன்முறையாக பஸ் நடத்துனர் சேவைக்காக பெண்கள் இன்று உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதுவரை ஆண்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த இந்தத் துறைக்கு பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட முடிவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பெண் அதிகாரிகள் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட 19 புதிய பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (06) வெள்ளிக்கிழமை மாக்கும்புர பல்துறை போக்குவரத்து மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய பெண் நடத்துனர்களுக்காகவே விசேடமாக வடிவமைக்கப்பட்ட புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்த நிகழ்வில் இடம்பெற்ற மற்றொரு சிறப்பம்சமாகும்.

for-the-first-time-in-history-female-bus-conductors-will-be-appointed-at-langama

for-the-first-time-in-history-female-bus-conductors-will-be-appointed-at-langama

for-the-first-time-in-history-female-bus-conductors-will-be-appointed-at-langama

for-the-first-time-in-history-female-bus-conductors-will-be-appointed-at-langama

for-the-first-time-in-history-female-bus-conductors-will-be-appointed-at-langama

for-the-first-time-in-history-female-bus-conductors-will-be-appointed-at-langama

Post a Comment

Previous Post Next Post