இந்த முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானவர்களில் பெரும்பாலானோர் பெண் பிள்ளைகள் என்றும், உயிரியல் பிரிவில் மாத்திரம் ஆண் பிள்ளைகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். இம்முறை உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் குறிப்பிடத்தக்க குறைவு காணப்பட்டதாகவும், அது 32.03 சதவீதமாக இருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, உயிரியல், பௌதீகவியல், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய பாடப்பிரிவுகள் அத்துடன் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். அதன்படி, இம்முறை ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நாட்டின் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளனர்.உயிரியல் 1)டிலான் சஞ்சன கருணாரத்ன,கொழும்பு ரோயல் கல்லூரி,சிங்களம்,2.9289 2)கமகே டொன் விஷான் சசிது,ஹோரண தக்ஷிலா மத்திய மகா வித்தியாலயம்,சிங்களம்,2.9112 3)அ. தர்ஷனா,"ஸ்ரீ சண்முகம் இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை,தமிழ்
பௌதீகவியல் 1)தேவேந்திரன் திருக்குமரன்,கிளிநொச்சி மகா வித்தியாலயம்,தமிழ்,2.9400 2)கம்லத்கே கெதர தருஷ கிம்ஹான கம்லத்,குருணாகல் மாலியதேவ ஆண்கள் கல்லூரி,ஆங்கிலம்,2.8482 3)விதானலாகே வினுர பிரசாத் டி மெல், ஸ்ரீ சுமங்கல ஆண்கள் மகா வித்தியாலயம், பாணந்துறை,சிங்களம்
வர்த்தகம் 1)மொஹமட் சுபை டி மொஹமட் பர்ஹான்,காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம்,தமிழ்,3.0412 2)திசாநாயக்க முதியன்சலாகே சேனாதி திஹஸ்னா சுமணசேகர,கொழும்பு மியூசியஸ் கல்லூரி,ஆங்கிலம்,2.8990 3)திலீப சந்தரஸ் கருணாரத்ன,கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம், ஆங்கிலம், 2.8948
கலை 1)மாராசிங்க பத்திரணகே அச்சின்த மிஹிரங்க ரத்நாயக்க, வடமேல் ரோயல் கல்லூரி, குருணாகல்,சிங்களம்,3.2403 2)ஆலியா சையினப் ஹுலுசி,தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு, ஆங்கிலம், 3.1436 3)துஷாரி தினேத்யா ரணதுங்க,கொழும்பு மியூசியஸ் கல்லூரி சிங்களம், 2.8775
பொறியியல் தொழில்நுட்பம் 1)வனிகசூரிய ஆரச்சிகே டொன் ஹேஷான் அநுஜய வாலிகசூரிய,கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம், சிங்களம், 3.5158 2)யாப்பா முதியன்சலாகே சிதிஜ துலான் பண்டார,மகா விஜயபா தேசிய பாடசாலை, சிங்களம், 3.3552 3)மகாராஜா பத்திரகே ரிவைன் வின்சர்,மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலயம், சிங்களம், 3.3206
உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம் 1)விஜேரத்ன முதியன்சலாகே டோனா இஷானி மனோத்யா,கம்பஹா வேயங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயம், சிங்களம், 3.3638 2)கந்தே ஆரச்சிகே இமாஷி விஹங்கா கந்தே ஆரச்சி,கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயம், சிங்களம், 2.8585 3)விஜேசிங்க ரத்நாயக்க முதியன்சலாகே ஜயத்மா அமந்தி விஜேசிங்க,இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயம், சிங்களம், 2.7618