களுபோவில அடுக்குமாடி குடியிருப்பில் காதலியை கொலை செய்த சீனர் கைது

china-arrested-for-killing-girlfriend-at-kalubowila-apartment

களுபோவில பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சீனப் பெண் ஒருவர் கொல்லப்பட்ட மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.




26 வயதான குறித்த சீன சந்தேகநபர், கொழும்பு 3, அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 2 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மூன்று கமராக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் இன்று (06) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி கொஹுவளை, களுபோவில, பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள 'கென்ட் ரெசிடென்ஸ்' என்ற நான்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றது. அங்கு வாடகைக்கு வசித்து வந்த 28 வயதுடைய லீவா வையன் என்ற சீனப் பெண் இவ்வாறு கொல்லப்பட்டார். சம்பவத்தின் போது அவருடன் இருந்த அவரது தற்போதைய காதலன் என சந்தேகிக்கப்படும் மற்றொரு சீனருக்கும் கத்திக்குத்து விழுந்து படுகாயமடைந்தார்.




குற்றத்தைச் செய்த வாங் ஹுயின் என்ற இந்த சந்தேகநபர், கொல்லப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் ஆவார். முக்கோண காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் இந்த பழிவாங்கலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடன், குறித்த குடியிருப்பு வளாகத்தில் அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில நாட்கள் தங்கியிருந்து திட்டமிட்டு இந்த குற்றத்தைச் செய்துவிட்டு அவர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். கொஹுவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

police-seek-public-assistance-to-find-wang-huynh-the-lover-who-killed-the-chinese-girl-in-kalubowila



a-chinese-girl-was-murdered-in-a-kalubowila-apartment

a-chinese-girl-was-murdered-in-a-kalubowila-apartment

a-chinese-girl-was-murdered-in-a-kalubowila-apartment

a-chinese-girl-was-murdered-in-a-kalubowila-apartment

a-chinese-girl-was-murdered-in-a-kalubowila-apartment

Post a Comment

Previous Post Next Post