
களுபோவில வைத்தியசாலை வீதியில் ரூபன் பீரிஸ் மாவத்தையை அண்மித்த ஒரு துணை வீதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் தங்கியுள்ள செய்தியாளர்கள் குறிப்பிடுகையில், இந்தத் தீ விபத்து மின் பிறப்பாக்கிகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றினுள் ஏற்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் பல குடியிருப்பு அலகுகளும் ஒரு வாகன விற்பனை நிலையமும் அமைந்துள்ளதால், தீ வேறு இடங்களுக்குப் பரவும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீ மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும் அதை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கும் தற்போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அந்த இடத்தில் உள்ள செய்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.