
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை பதுக்கி வைத்திருந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டுண்டா கார்டன்ஸ் பிரதேசத்தில் சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (01) இரவு நேரத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த நடவடிக்கையின் போது சந்தேகநபரின் பொறுப்பில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 100 சிகரெட்டுகள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய சீனப் பிரஜை யுவதி என பொலிஸார் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.