அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் கிடைக்கும் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பு, அமெரிக்க ஜனாதிபதி குடியேற்றக் கொள்கையை மாற்றியமைக்க எடுக்கும் முயற்சிக்கு ஒரு பெரிய தடையாகும்.
ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்ற பிறகு, தற்காலிக சட்டப்பூர்வ அந்தஸ்தில் உள்ள அல்லது முறையான ஆவணங்கள் இல்லாத பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை கிடைப்பதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், நீதிபதிகள் 6-3 என்ற பெரும்பான்மை ஒப்புதலுடன் புதிய தீர்ப்பை அறிவித்தனர். அப்போது, டிரம்ப் நிர்வாகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர்கள், அமெரிக்காவில் பிறந்து அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அரசியலமைப்பின் 14வது திருத்தம், அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிட்டனர்.
இந்தத் தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆண்டுக்கு சுமார் 255,000 குழந்தைகள் அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் பிறக்கின்றன என்று சுட்டிக்காட்டினர். மேலும், தற்போதைய நிலவரப்படி, 2045 ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டின் ஆவணமற்ற மக்கள் தொகை மேலும் 2.7 மில்லியன் அதிகரிக்கும் என்றும் நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.