ஜனாதிபதி மன்னிப்பு மீளப்பெறப்பட்டது, ஞானசார தேரர் மீண்டும் சிறைக்குள்

presidential-pardon-reverse-gnanasara-thero-back-in

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம் அதனை இரத்து செய்துள்ளது.




காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட அம்மையார் மற்றும் மாற்று கொள்கைகளுக்கான மையம் (CPA) உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த பின்னர், நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற நீதிமன்ற அவமதிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக, ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, அதனை 6 வருடங்களில் கழித்து முடிக்கும் வகையில் உத்தரவிட மேன்முறையீட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.




பின்னர் அந்த சிறைத்தண்டனை 2018 அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டதுடன், ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த அவரை 2019 மே 23 அன்று அப்போதைய ஜனாதிபதி வழங்கிய விசேட மன்னிப்பின் கீழ் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 6 வருடங்கள் அனுபவிக்க வேண்டிய சிறைத்தண்டனையை 7 மாதங்களில் முடித்துக்கொண்டதால் மீண்டும் சிறைக்குச் சென்ற பின்னர் எஞ்சிய 5 வருடங்கள் 5 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

Post a Comment

Previous Post Next Post