ஏர்பஸ் விமான ஒப்பந்தத்தில் 100 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தேவையான வசதிகளை வழங்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
சபையில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்குமாறு நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர கடிதம் மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அதன்படி, நாளை (08) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுக்கு ராஜபக்ஷ கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஏர்பஸ் விமான கொள்முதல் நடவடிக்கையின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.