தேசிய ரக்பி அணியின் முன்னாள் தலைவரான பஸில் மரிஜா, இலங்கை ஆண்கள் ஏழு பேர் கொண்ட ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறவுள்ள ரக்பி போட்டித் தொடருக்காக அணியைத் தயார்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைவர் பவித்ர பெர்னாண்டோ தெரிவித்தார்.
உள்ளூர் ரக்பி துறையில் பரந்த அனுபவம் கொண்ட மரிஜா, இதற்கு முன்னர் கண்டி ட்ரினிட்டி கல்லூரி ரக்பி அணி மற்றும் கண்டி விளையாட்டு கழகத்தின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். விளையாட்டுப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர், இலங்கை தேசிய ரக்பி சங்க அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
1890களில் இலங்கைக்கு பாடசாலை ரக்பியை அறிமுகப்படுத்திய முதல் பாடசாலையான கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில் தனது ரக்பி திறமைகளை வளர்த்துக் கொண்ட மரிஜா, 2015 ஆம் ஆண்டு யசாரா அபேநாயக்கவை மணந்தார்.