சர்ச்சைக்குரிய மிக் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் இந்த புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் விமானப்படைத் தளபதி, விமானப்படை மார்ஷல் ரொஷான் குணதிலக்கவும், மிக் விமான ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நேற்று (10) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்திருந்தார். அவர் பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.