பாடசாலைப் புத்தகங்களின் விலையைக் குறைக்க VAT வரி நீக்கப்பட்டது

vat-to-be-removed-to-reduce-the-price-of-school-books

பாடசாலைப் புத்தகங்களுக்கான தற்போது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை வெளிப்படுத்தினார்.

இந்த சலுகையை வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையின் மூலம் நாட்டுக்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post