களுத்துறை, நாகொடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டு அவரது மனைவி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
T-56 ரக துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.