புத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு மற்றும் சிங்கள பௌத்த மரபுகளைப் பாதுகாப்பது தொடர்பான தேசிய மாநாடு இன்று (12) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. அகில இலங்கை பௌத்த மாநாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் மகா சங்கத்தினர், அரசியல்வாதிகள் உட்பட பல தரப்பினர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, வண. கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை முற்றிலும் சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டினார்.
அவர் கூறியபடி, சம்பந்தப்பட்ட நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பிரீதிப்பத்மன் சூரசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, தனக்கு வழங்கக்கூடிய தண்டனை அதிகாரம் வரையறுக்கப்பட்டிருப்பதால், கடுமையான தண்டனைக்காக விடயங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
"இங்கேதான் சிக்கல் உள்ளது, இப்போது இதன் சட்ட நிலை என்ன? நீதிமன்ற அவமதிப்பு. இங்கே தண்டனைகள் உள்ளன. Magistrate’s Court fine not exceeding one thousand five hundred rupees imprisonment of either simple imprisonment or rigorous imprisonment for a period not exceeding eighteen months. பதினெட்டு மாதங்களுக்கு மேல் கொடுக்க முடியாது. ஒன்றரை வருடங்கள். ஆனால் இங்கே பிரீதிப்பத்ம சூரசேன ஆறு வருடங்கள் கொடுத்திருக்கிறார். சட்டப்படி பதினெட்டு மாதங்கள்தான். "
என்று அவர் கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை 1,500 ரூபாய்க்கு மிகாத அபராதம் மற்றும் 18 மாதங்களுக்கு மிகாத சாதாரண அல்லது கடுங்காவல் சிறைத்தண்டனை என்று சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறிருக்கையில் நீதிபதி பிரீதிப்பத்மன் சூரசேன ஆறு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாகக் கூறினார். சட்டத்தில் உள்ள 18 மாத உச்ச வரம்பு மேன்முறையீட்டு நீதிமன்ற அவமதிப்புக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சமர்ப்பிக்கப்பட்ட மற்ற விடயங்கள் தொடர்பாக எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கியது நியாயமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். இது ஒரு சதி என்று மனோகர டி சில்வா கூறியது சரியானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஞானசார தேரரிடமிருந்து தொடங்கிய இந்த செயல்முறை இப்போது கம்மன்பில, ஜயவீர, வீரவன்ச, மஹிந்த பத்திரண உட்பட பல சிங்கள தலைவர்கள் வரை பரவியுள்ளது என்றும், அவர்களுக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். "இப்போது இது ஒரு வைரஸ் போல பரவுகிறது. இதை நிறுத்த நாம் சட்ட வழியில் செல்ல வேண்டும்," என்று அவர் கூறினார்.
ஒருபுறம் சங்கத்தினரைத் தாக்குவதாகவும், மறுபுறம் சிங்களத் தலைவர்களைத் தாக்குவதாகவும், இது வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலக்கு வைப்பு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.