பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவரது 98 வயது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட், குறித்த வழக்கிலிருந்து விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்ற செயல்முறைகளுக்கோ அல்லது வழக்கு விசாரணைகளுக்கோ முகங்கொடுப்பதற்கு பொருத்தமான மனநிலையில் இல்லை என முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளார். அதன்படி, யோஷித ராஜபக்ஷவும் அவரும் ஒரே வழக்கின் கீழ் எதிர்கொண்ட இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார்.
பாட்டி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், இந்த சம்பவம் தொடர்பான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் திறந்த நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, யோஷித ராஜபக்ஷ தான் அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதி என்று தெரிவித்தார்.