காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றனர், அதனை கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது.
அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பயந்துபோன அந்த இரண்டு கைதிகளும் சிறையிலிருந்து வெளியேற எடுத்த முயற்சியைக் கைவிட்டு, மீண்டும் சிறை அதிகாரிகளிடம் சரணடைந்தனர் என சிறைச்சாலை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட இரண்டு கைதிகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதால், அவர்களை சிறைச்சாலை மருத்துவரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
News