பொலன்னறுவை-மட்டக்களப்பு வீதியில் வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!

polonnaruwa-road-flooding

நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.




குறிப்பாக, அந்த வீதியின் கல்லேல்ல முதல் மனாம்பிட்டிய வரையிலான பகுதி ஊடாக நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக பொலன்னறுவை பொலிஸார் நேற்று (19) இரவு முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

வீதி ஊடாக நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிறிய வாகனங்கள் பயணிப்பது ஆபத்தானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post