2026 ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நிறைவடையும் வரை இலங்கை T20 சர்வதேச அணியின் தலைவராக தசுன் ஷானக தொடர்ந்து செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் (SLC) பிரதான தெரிவுக் குழுத் தலைவர் பிரமோத்யா விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதான தெரிவுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த விக்கிரமசிங்க, 2026 உலகக் கிண்ணத்திற்காக 25 வீரர்களைக் கொண்ட குழாம் ஒன்றை முந்தைய தெரிவுக் குழு ஏற்கனவே இறுதி செய்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், எந்தவித மாற்றமும் இன்றி அதே குழாமை முன்னெடுத்துச் செல்ல தற்போதைய தெரிவுக் குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம், 2026 உலகளாவிய போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை அணி கட்டமைக்கப்படும் ஒரு சந்தர்ப்பத்தில், தலைமைத்துவத்திலும் தெரிவு உத்திகளிலும் தொடர்ச்சியைப் பறைசாற்றுகிறது.