உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவளவ - தனமல்வில வீதியில் மலபொட்டுஆர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொரி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லொரியுடன் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக உடவளவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துக்கு காரணமான லொரி சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடவளவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.