மොරட்டுவ பாடசாலை ஆய்வகத்தில் இரசாயனக் குழாய் வெடித்து 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

a-chemical-tube-exploded-in-a-panadura-school-laboratory-and-14-people-were-taken-to-hospital

நேற்று (13) ஆம் திகதி மொரட்டுவ, வீரப்புரன் அப்பு வித்தியாலயத்தில் பதின்மூன்று மாணவிகள், ஐந்து ஆசிரியைகள் மற்றும் பாடசாலை சுத்திகரிப்பு பணிக்காக வந்திருந்த ஒரு தாய் உட்பட பத்தொன்பது பேர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவர்கள் ஏதோ ஒரு இரசாயனப் பொருளை சுவாசித்ததன் காரணமாக சுகவீனமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கிடைத்த தகவல்களின்படி, இந்த குழுவினர் பாடசாலையின் ஆய்வகப் பரிசோதனை ஒன்றின் போது இரசாயனப் பொருள் அடங்கிய ஒரு குழாய் கீழே விழுந்து உடைந்ததால், அதில் அடங்கியிருந்த பொருட்கள் சிதறியமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை காரணமாக அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு சுகவீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சம்பவம் பதிவானவுடன் மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு சம்பவ இடத்திற்கு வந்து தேவையான சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.




வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமானது அல்ல என வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்தனர், ஆரம்ப சிகிச்சைகளுக்குப் பின்னர் அவர்கள் வைத்தியசாலையின் நான்காவது விடுதிக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post