ஜனாதிபதியைச் சந்தித்து வழங்கப்பட்ட தீர்வுடன் இணங்கி மாட வலை மீனவர்கள் போராட்டத்தை நிறுத்துகின்றனர்

madal-fishermen-stop-their-protest-after-agreeing-to-the-solution-given-after-meeting-with-the-president

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாட வலை மீனவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, மீனவ சமூகம் தமது ஆர்ப்பாட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், அனைத்து தரப்பினரும் இணைந்து குறுகிய காலத்திற்குள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வைக் கண்டறிய இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்பக் கலந்துரையாடல்கள் அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.




தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக 2010 இல் ஆரம்பிக்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு முதல் வின்ச் (Winch) இயந்திர முறைமையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டு வந்த மாட வலைத் தொழிலுக்கு தற்போது ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து மீனவப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர். தாம் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடிக்கு கவனம் செலுத்தி இவ்வாறானதொரு கலந்துரையாடலை வழங்கியமைக்காக அவர்கள் ஜனாதிபதிக்கு தமது நன்றியையும் தெரிவித்தனர்.

மீனவர்களின் அனுபவங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு செவிமடுத்த ஜனாதிபதி, எந்தவொரு குடிமகனினதும் பொருளாதார அல்லது வாழ்க்கை நிலை சீர்குலைவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என வலியுறுத்தினார். அனைவரினதும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் போது, ஏனைய மீனவ மக்களின் முறைப்பாடுகள், சுற்றுச்சூழல் அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு உள்ளிட்ட விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்தும் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.




சர்வதேச மரபுகளுக்கு இணங்கவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தும், எதிர்கால சந்ததியினருக்காக கடல் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தீர்வுகளைக் கண்டறிவது அத்தியாவசியமானது என ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். அத்துடன், இந்த பிரச்சினை தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை கலந்துரையாடல்கள் நடைபெறும் காலப்பகுதியில், சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் குத்தகை மற்றும் ஏனைய கடன் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நிதி அமைச்சுடன் விசேட கலந்துரையாடலை வழங்குவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மாட வலை மீனவப் பிரதிநிதிகளுடன், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச மற்றும் ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

madal-fishermen-stop-their-protest-after-agreeing-to-the-solution-given-after-meeting-with-the-president

madal-fishermen-stop-their-protest-after-agreeing-to-the-solution-given-after-meeting-with-the-president

madal-fishermen-stop-their-protest-after-agreeing-to-the-solution-given-after-meeting-with-the-president

Post a Comment

Previous Post Next Post