பாடசாலைகளுக்குள் பாலியல் கல்வி தேவையில்லை - சங்க மாநாடு தீர்மானிக்கிறது

no-need-for-sex-education-in-schools---sangam-decides

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு உரிய மரியாதையை வழங்காததற்கும், இராஜதந்திர விடயங்களில் மகா சங்கத்தின் ஆலோசனைகளைப் பெறும் நீண்டகால மரபை புறக்கணித்ததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த நூற்றுக்கணக்கான பிக்குகள் கலந்துகொண்ட 'மகா சங்க மாநாடு' இன்று (20) பிற்பகல் கொழும்பிலுள்ள பௌத்த மகா சம்மேளன தலைமையகத்தில் நடைபெற்றது.




சுமார் 22 மில்லியன் இலங்கை சனத்தொகையில் 70% இற்கும் அதிகமானோர் பௌத்தர்கள் ஆவர். இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் இநாட்டில் வாழ்கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மத சுதந்திரத்தையும் சட்டத்தால் உறுதிப்படுத்தியிருந்தாலும், பௌத்த மதத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டு அதனைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இங்கு விசேடமாக வலியுறுத்தப்பட்டது. சமூக, கலாச்சார மற்றும் அரசியல் விடயங்களில் இநாட்டு பௌத்த பிக்குகளுக்கு ஒரு வலுவான செல்வாக்கு உள்ளது.

கௌரவ முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில், தற்போதைய புத்த சாசனம், பிக்குகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தணிப்பதற்காக 10 அம்ச சங்கப் பிரகடனம் வெளியிடப்பட்டது. மொரட்டுவ லூனாவ போதிராஜாராமதிபதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்களப் பிரிவின் தலைவர், கௌரவ பேராசிரியர் அகலகட சிறிசுமன தேரர் குறிப்பிட்டதாவது, இந்த சங்கப் பிரகடனம் அனைத்து தேரர்களின் கையொப்பங்களுடன் எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.




மகிந்த தேரரின் வருகையிலிருந்து இருந்துவரும் அரசிற்கும் பௌத்த மதத்திற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பு மற்றும் பிக்குகளுக்கு அரச ஆலோசனைகளை வழங்கும் உரிமையை அங்கீகரிக்குமாறு குறித்த பிரகடனம் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டைய கல்வெட்டுகளின்படி 'திறமையற்றவர்கள் இலங்கையின் அரசர்களாக இருக்கக்கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், நாட்டின் உயர்மட்டப் பதவிகளுக்கு பௌத்தர்கள் அல்லாதவர்களை நியமிக்கக் கூடாது என்றும், தசராஜ தர்மம் உள்ளிட்ட பௌத்த அரசியல் தத்துவத்திற்கு இணங்க ஆட்சியாளர்கள் நான்கு பக்கச்சார்புகளின்றி செயல்பட வேண்டும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மகா விகாரையை மையமாகக் கொண்ட பௌத்த கல்வித் தத்துவங்களின் அடிப்படையில் நவீன பாடசாலைக் கல்வி மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்குவதன் அவசியம் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அங்கு, பாடசாலைகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கடுமையாக கேள்விக்குள்ளாக்கிய பேராசிரியர் கௌரவ கொட்டபிட்டியே ராகுல தேரர், அத்தகைய முறையான போதனைகள் இல்லாமலேயே கடந்தகால இலங்கையர்கள் வெட்கம், பயம் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து மிகவும் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.



அரசியலமைப்புச் சட்டத்தாலும் கண்டி ஒப்பந்தத்தாலும் பௌத்த மதத்திற்கு உள்ள உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று இது சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கடந்தகாலத்திலிருந்து இருந்துவரும் இல்லற-துறவற உறவை மேற்குலக சதிகாரர்களாலோ அல்லது புலிகள் அமைப்பாலோ கூட உடைக்க முடியவில்லை என்றும், தற்போது அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவதூறுகளையும் அழுத்தங்களையும் தடுப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மகா சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். அத்துடன், புத்தர் சிலைகள் உட்பட தொல்பொருள் மதிப்புமிக்க விகாரைகள் மற்றும் தேவாலயங்களை தேசிய மரபுரிமைகளாகப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு வன்முறைச் சம்பவமும் இன்றி அமைதியாக முடிவடைந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உரிய அமைச்சர் இல்லாததால் தற்போது செயலிழந்துள்ள புத்த சாசன அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தை மீண்டும் திறமையான நிறுவனங்களாக மாற்றுவதன் அவசியத்தையும் மகா சங்கத்தினர் அரசாங்கத்திடம் கடுமையாக வலியுறுத்தினர்.

no-need-for-sex-education-in-schools---sangam-decides

no-need-for-sex-education-in-schools---sangam-decides

no-need-for-sex-education-in-schools---sangam-decides

no-need-for-sex-education-in-schools---sangam-decides

no-need-for-sex-education-in-schools---sangam-decides

no-need-for-sex-education-in-schools---sangam-decides

no-need-for-sex-education-in-schools---sangam-decides

no-need-for-sex-education-in-schools---sangam-decides

no-need-for-sex-education-in-schools---sangam-decides



Post a Comment

Previous Post Next Post