இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்த அனுபவமிக்க வீரர் அரவிந்த டி சில்வாவின் அன்புத் தாயார் ராணி டி சில்வா அம்மையார் இன்று (14) காலமானார். அவர் இறக்கும் போது 94 வயதாக இருந்தார்.
அரவிந்த டி சில்வா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி பெற்று இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக உருவெடுத்ததற்குப் பின்னால் இருந்த முக்கிய பலமான அடித்தளமாக அவர் கருதப்படுகிறார். சிறுவயதிலிருந்தே அவரது கிரிக்கெட் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும், 1996 உலகக் கோப்பை வெற்றியில் இணையற்ற பங்களிப்பைச் செய்யும் வரை அரவிந்தவின் விளையாட்டு வாழ்க்கையை வெற்றிகரமாக அமைப்பதற்கும் அவர் அளித்த அளப்பரிய ஆதரவு சிறப்பானது.
காலமான ராணி டி சில்வா அம்மையாரின் பூதவுடலுக்கான இறுதிச் சடங்குகள் நடைபெறும் முறை மற்றும் தேதி குடும்ப உறவினர்களால் பின்னர் அறிவிக்கப்படும்.