பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமூலம் அமுலுக்கு வருகிறது - பல உள்ளக மாற்றங்கள்

universities-amendment-bill-comes-into-force---a-number-of-internal-changes

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) தனது சான்றிதழை வழங்கினார்.




இந்த சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த ஜனவரி 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலம், 1978 ஆம் ஆண்டு இலக்கம் 16 இன் பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாகும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் ஆகியோரால் 2025 டிசம்பர் 3 ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.




இந்த திருத்தச் சட்டம், பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் (தரம் I) ஆகியோரில் இருந்து பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கு பீட சபைக்கு அதிகாரம் வழங்குதல், பீடாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நிர்வாக சபைக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் பீடாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான வரையறைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், ஒரு கல்விப் பிரிவின் தலைவரை நியமிக்கும் போது சபை பின்பற்ற வேண்டிய நடைமுறை திருத்தப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஒரு கல்விப் பிரிவின் தலைவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நிர்வாக சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு கல்விப் பிரிவின் தலைவரின் பதவிக்காலம் தொடர்பான வரையறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



அதன்படி, பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2026 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வரும்.

Post a Comment

Previous Post Next Post