தாக்குதல் தொடருக்கு முன்னர் லெபனானில் உள்ள பல கிராமங்களுக்கு எச்சரிக்கைகள்

warnings-to-several-villages-in-lebanon-ahead-of-a-series-of-attacks

லெபனான் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள பரந்த இராணுவத் தாக்குதல்களுக்கு முன்னர், அந்நாட்டின் பல கிராமங்களில் வசிப்பவர்களுக்காக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மூலம் சமீபத்திய வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




ஹிஸ்புல்லா அமைப்பின் நடவடிக்கைகளால் இஸ்ரேலிய இராணுவம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றும், எவ்வாறாயினும், சாதாரண பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நோக்கமும் தங்களுக்கு இல்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசேட எச்சரிக்கை அல்-பராமின், பெட் லிஃப், யாடார், கஃபர் கிலா, செடிக்வின், செப்கின், ஜபல் அல்-பதாம், ரஷ்க்னானியா, டேர் அம்மார், கானா, மஜ்தல் சவுன், அல்-ஷுவைட்டியா மற்றும் அல்-ரமாதியா ஆகிய கிராமங்களில் வாழும் மக்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.




சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறுமாறும், அந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து குறைந்தது 1,000 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திறந்தவெளிப் பகுதிகளுக்கு உடனடியாகச் செல்லுமாறும் அவர்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.

ஹிஸ்புல்லா உறுப்பினர்கள், அவர்களின் வசதிகள் அல்லது போர் உபகரணங்களுக்கு அருகில் தங்கியிருக்கும் எவரும் தங்கள் உயிரை கடுமையான ஆபத்தில் ஆழ்த்திக் கொள்வார்கள் என்று சுட்டிக்காட்டும் இஸ்ரேலிய இராணுவம், காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறி தங்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களைக் கடுமையாகக் கேட்டுக்கொள்கிறது.

warnings-to-several-villages-in-lebanon-ahead-of-a-series-of-attacks

warnings-to-several-villages-in-lebanon-ahead-of-a-series-of-attacks

Post a Comment

Previous Post Next Post