யாழ்ப்பாணம் ஊரெழு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தொகையொன்று தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட களஞ்சியசாலையை சோதனை செய்த போது 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.