உள்ளூர் சந்தையில் ஒரு சிமெந்துப் பையின் விலையை 150 முதல் 175 ரூபாய் வரை அதிகரிக்க சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிமெந்து உற்பத்திக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த புதிய விலை திருத்தம் செய்ய வேண்டியிருந்தது என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், சிமெந்து விலைக்கு மேலதிகமாக, கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்படும் பிற முக்கிய மூலப்பொருட்களின் விலைகளும் தற்போது அசாதாரணமாக உயர்ந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மணல், கருங்கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலைகளும் இவ்வாறு பெருமளவில் அதிகரித்துள்ளதால், இத்துறை ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டரிங்டன் போல் சுட்டிக்காட்டினார்.