விபத்து பற்றி பொய் சொல்லி லஞ்சம் பெற முயன்ற பொலிஸ் சார்ஜன்ட்

the-police-sergeant-who-tried-to-take-bribe-by-telling-about-a-fake-accident

அக்கரப்பற்று பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.




அக்கரப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் ஆணைக்குழுவிடம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

முறைப்பாட்டாளர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் அவரது தாய் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தே இச்சம்பவத்திற்கு பின்னணியாகும்.




இது தொடர்பாக 119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் செயற்பட்ட சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி, சம்பந்தப்பட்ட தாயிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும், பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை திரும்ப வழங்குவதற்கும் 5,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.

இலஞ்ச ஆணைக்குழுவின் கூற்றுப்படி, சந்தேகநபர் முதல் சந்தர்ப்பத்திலேயே ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டதுடன், முறைப்பாட்டாளரின் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் அவரிடம் மீண்டும் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர், சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான வாக்குறுதியின் பேரில் எஞ்சிய நான்காயிரம் ரூபாவை அக்கரப்பற்று வைத்தியசாலை வளாகத்தில் பெற்றுக்கொள்ளச் சென்றபோது, சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post