வாக்குவாதத்திற்குப் பிறகு தந்தையைக் கொன்ற மகன்

the-son-killed-his-father-after-an-argument

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திரஹபிட்டிய கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.




நேற்று (24) காலை இந்த குற்றம் நடந்துள்ளதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவராவார்.

இறந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, கோபமடைந்த மகன் தனது தந்தையை இந்த கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 33 வயதுடைய சந்தேகநபரான மகன் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மனிதக் கொலை தொடர்பில் மாத்தளை பொலிஸ் நிலையம் மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

the-son-killed-his-father-after-an-argument

Post a Comment

Previous Post Next Post