ஒரு சந்தேக நபரை துரத்தும்போது கால் இடறி, கடமைத் துப்பாக்கி வெடித்தது.

while-chasing-a-suspect-his-foot-tripped-and-the-duty-firearm-went-off

பலாங்கொடை, முகுணமலை பிரதேசத்தில் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த சந்தேகநபரொருவரை துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலாங்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி படுகாயமடைந்துள்ளார். நேற்று (01) அதிகாலை 4:50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபரை துரத்திச் சென்றபோது பொறுப்பதிகாரி கீழே விழுந்ததில், அவரது இடுப்பில் இருந்த உத்தியோகபூர்வ துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் பலாங்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான எம்.எல். சமரவீர ஆவார்.




ஏதேனும் ஒரு குற்றத்துடன் தொடர்புடைய நபர் அல்லது குழுவினர் முகுணமலை பிரதேசத்தில் உள்ள காட்டில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பொறுப்பதிகாரியுடன் பொலிஸ் சார்ஜன்ட் தயானந்த (53427) சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு சந்தேகநபர் திடீரென தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது இருட்டில் சந்தேகநபரை துரத்திச் சென்ற பொறுப்பதிகாரி கால் இடறி கீழே விழுந்ததாகவும், அந்த மோதலுடன் பிஸ்டல் வெடித்து அவருக்கே சுட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொறுப்பதிகாரி தனது கையடக்கத் தொலைபேசி மூலம் பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சம்பவம் குறித்து உடனடியாகத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அவர் உடனடியாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக அவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான களப் பரிசோதனை நேற்று பகல் பலாங்கொடை பிரதான நீதவான் பாக்கிய தில்ருக்ஷி விக்ரமசிங்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன், பலாங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

while-chasing-a-suspect-his-foot-tripped-and-the-duty-firearm-went-off

Post a Comment

Previous Post Next Post