லொக்கு பட்டியின் சகோதரன் பொடி பட்டியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு

a-shooting-aimed-at-big-pattys-brother-little-patty

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொக்கு பட்டி என்பவரின் சகோதரரான பொடி பட்டி என்பவரை இலக்கு வைத்து அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.




நேற்று (16) இரவு 11.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொடி பட்டி என்பவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.




அவர் நேற்று இரவு நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post