இன்று மாலை இடியுடன் கூடிய மழை

thunderstorms-this-evening

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நாட்டின் பல பகுதிகளுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் இந்த மழை நிலைமை எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.




மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மேலதிகமாக அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேர் மேலாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (09) நண்பகல் 12:12 மணிக்கு சிலாபம், பிங்கிரிய, ஹல்மில்லவெவ, பண்டுவஸ்நுவர, கொகரெல்ல, கௌடுபெலல்ல, கொப்பவெலி மற்றும் கிரான்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post