பிரஷர் பார்க்கும் போது களுத்துறை வைத்தியசாலை பெண் வைத்தியரின் மார்பைத் தொட்ட நோயாளி கைது செய்யப்பட்டார்

the-patient-who-touched-the-chest-of-the-kalutara-hospital-doctor-while-watching-the-pressure-was-arrested

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.




இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் மஹகம, சமகிபுர, தென்னஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் மாத்தறை பிம்புர வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைகளைப் பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் அறிக்கைகளின்படி, சம்பந்தப்பட்ட பெண் வைத்தியர் சந்தேகநபரான நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.




அப்போது சந்தேகநபர் அவரது மார்புப் பகுதியைத் தொட்டு இந்த அநாகரிகச் செயலைச் செய்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப் போவதாக வைத்தியர் அவருக்கு கடுமையாகத் தெரிவித்த பின்னரும், மீண்டும் ஒருமுறை அவரைப் பரிசோதிக்கச் சென்றபோது சந்தேகநபர் இரண்டாவது முறையாகவும் அதே தொல்லையை அவருக்குக் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அதே வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், நேற்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



இந்த குற்றச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் நாலக குணசேகரவின் நேரடி உத்தரவின் பேரில், உதவி பொலிஸ் பரிசோதகர் வன்னிஆராச்சி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post