19 சீனப் பிரஜைகளுக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாகத் தயாரித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேயங்கொட பிரதேசத்தில் தங்கியிருந்தபோது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டவர்கள் சிலரின் கடவுச்சீட்டுகளை மோசடியாக வைத்திருந்தமை மற்றும் தயாரித்தமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.