தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் ஒரு பேருந்து வீதியை விட்டு விலகி, நுழைவாயில் கதவின் பாதுகாப்பு வாயிலையும் உடைத்துக்கொண்டு அருகில் இருந்த கம்பத்தில் மோதியதில் இன்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சுமார் பத்து பயணிகள் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்டவுடன் அதிவேக நெடுஞ்சாலையில் நீண்ட வாகன வரிசை காணப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.