
அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கையில், சிராவஸ்திபுர, வதாகம பிரதேசத்தில் அமைந்துள்ள தேவரம் விகாரைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், அங்கு வசிக்கும் ராஜங்கன சத்தாரத்ன தேரரை கொடூரமாகத் தாக்கி சொத்துக்களை திருடிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்கள் காரில் விகாரைக்கு வந்து, பின்னர் பிக்குகள் தங்கும் இடத்திற்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அங்கு, அவர்கள் தேரரிடம் இருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் ஒரு மடிக்கணினியையும் பலவந்தமாகப் பறித்துச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த ராஜங்கன சத்தாரத்ன தேரர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.