முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய மக்கள் முன்னணியின் தலைவரான அவர், ஒரு விசேட விசாரணை தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணையே இந்த கைதுக்குக் காரணம். இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.