ஹோகந்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ஐந்து உயர் சக்தி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு போலி பதிவு இலக்கத் தகடுகளுடன் இருபத்தைந்து வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29) நண்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தர பிரதேசத்திலேயே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட உயர் சக்தி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போலி இலக்கத் தகடுகளுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.