ஒரு அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையில், பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கூறியுள்ளார்.
"தினந்தோறும் இலங்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த உன்னதமான நாடு, மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் உருவாக்கப்பட்ட நாடு, அபிவிருத்தி செய்யப்பட்ட நாடு, கட்டியெழுப்பப்பட்ட நாடு, தினந்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது.
தினந்தோறும். ஆனால் இந்த அரசாங்கத்தில் நாடு எவ்வளவு வீழ்ச்சியடைந்தாலும், அரசாங்கத்தின் தலைவர்கள், தலைவிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆணவம் ஒரு சதமளவும் குறையவில்லை."