வியன்னா கால்வாயில் கவிழ்ந்த டிராக்டரின் ஓட்டுநர் காணாமல் போனார்

driver-of-tractor-that-fell-into-vienna-canal-missing

மஹியங்கனை வியன்னா கால்வாயில் இன்று (21) பிற்பகல் டிராக்டர் கவிழ்ந்ததில் அதன் சாரதி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான டிராக்டர் இவ்வாறு வியன்னா கால்வாயில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




இந்த டிராக்டர் அராவவத்த தீப்பெட்டி பாலத்திற்கு அருகில் வியன்னா கால்வாயில் கவிழ்ந்ததாகவும், விபத்து நடந்தபோது சாரதி மட்டுமே டிராக்டரில் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மாபாகட நோக்கிச் சென்று கொண்டிருந்த டிராக்டர், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் வியன்னா கால்வாயில் கவிழ்ந்துள்ளது. விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர். மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகள் அருகிலுள்ள கிராம மக்களுடன் இணைந்து வியன்னா கால்வாயில் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிராக்டர் மீட்கப்பட்டதற்கான காணொளி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

gossiplanka image

Post a Comment

Previous Post Next Post