இரண்டு ஆண் சடலங்கள்

two-male-corpses

வனாத்தவில்லுவ மற்றும் கடுவெல பொலிஸ் பிரிவுகளில் மிதந்து கொண்டிருந்த இரண்டு ஆண் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 20ஆம் திகதி நண்பகல் வேளையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




வனாத்தவில்லுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்லுவில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் வனாத்தவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடுவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பிரதேசத்தில் களனி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த மற்றுமொரு ஆண் சடலமும் அதே நாளில் நண்பகல் வேளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் தித்தபத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக சடலம் கிழக்கு கொழும்பு வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post