யோஷிதா கைது செய்யப்பட்டார்

yoshita-arrested

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்று (17) முற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். குறித்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அங்கு ஆஜரான சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விசாரணை முக்கியமாக 2008 ஆம் ஆண்டில் அவர் இலங்கை கடற்படையில் இணைந்தமை மற்றும் பிரித்தானிய ரோயல் கடற்படை அகடமியில் பயிற்சி பெற்றமை ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. கடற்படை கெடட் அதிகாரியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான கல்வித் தகுதிகளைத் திருத்தியமைத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அரச நிதியைப் பயன்படுத்தி பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சி பெற்றமை தொடர்பாகவும் இலஞ்ச ஆணைக்குழு இங்கு விசேடமாக விசாரணை செய்கிறது. வேறொரு நீதிமன்ற நடவடிக்கையில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் நேற்று ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என யோஷித ராஜபக்ஷ முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி, இலஞ்ச ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட மீள் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இன்று வாக்குமூலம் அளிக்க வந்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post