Developer of the year விருதினால் பிரைம் குழுமம் சர்வதேச அளவில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் கௌரவிக்கப்படுகிறது.

prime-group-has-been-honored-with-the-developer-of-the-year-award-for-the-second-consecutive-time-in-front-of-the-international-community

ரியல் எஸ்டேட் துறையில் மூன்று தசாப்த கால அனுபவமுள்ள பிரைம் குழுமம், 2026 ஆம் ஆண்டு Real Estate Asia Awards விருது விழாவில், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக “Developer of the Year” விருதை சிங்கப்பூர் சாண்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு மையத்தில் அண்மையில் பெற்றது. இதுவரை 50க்கும் மேற்பட்ட அடுக்குமாடி திட்டங்களை ஆரம்பித்து, அவற்றில் 45க்கும் மேற்பட்டவற்றை ஏற்கனவே நிறைவு செய்து வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்க பிரைம் குழுமம் வெற்றி பெற்றுள்ளது.




பிரைமின் எதிர்காலப் பார்வையின் சிறப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தற்போது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ள போர்ட் சிட்டியில் உலகத் தரம் வாய்ந்த மரீனா & வாட்டர்ஃபிரண்ட் அடுக்குமாடித் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரைம் குழுமமும் மெல்வாவும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம், பிரைம் குழுமத்தின் அபிவிருத்திப் பணிகளில் இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

போர்ட் சிட்டியின் மரீனா வலயத்தில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் இலங்கையின் சொத்துத் துறையை உலகளாவிய நிலைக்கு உயர்த்துவதே பிரைம் குழுமத்தின் எதிர்பார்ப்பாகும்.

prime-group-has-been-honored-with-the-developer-of-the-year-award-for-the-second-consecutive-time-in-front-of-the-international-community

Post a Comment

Previous Post Next Post