ருவன்வெலிசாயவின் கலசம் FAKE என்று கூறியவர்களுக்கு வழக்கு

lawsuits-for-those-who-said-fake-in-ruwanweli-sadadeye

அனுராதபுரம் ருவன்வெலி மகா சாயவின் தற்போதைய கோபுரம் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு போலி கோபுரம் பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான ஒரு பத்திரிகை விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு யூடியூப் சேனலில் நேர்காணல் நடத்தி தகவல்களை வெளியிட்ட ஒரு நபருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கம்பஹா மேல் நீதிமன்றம் இலக்கம் இரண்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன அம்மையார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார், மேலும் அன்றைய தினம் தொடர்புடைய வழக்கின் அனைத்து ஆவணங்களையும் மற்றும் வழக்கு பொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் முறைப்பாட்டின் 7வது சாட்சிக்கு அழைப்பாணை (நோட்டீஸ்) பிறப்பிக்கவும் நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.




தொடர்புடைய யூடியூப் நேர்காணல் மூலம் செய்யப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக, அப்போதைய அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த அநுஜ ஜயசிங்க என்பவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கின் மூல வழக்கு அறிக்கை கம்பஹா மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணையின் போது கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்ததுடன், அந்த அறிக்கை தற்போது மஹர நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி, அடுத்த வழக்குத் தினத்தில் அதனுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மற்றும் வழக்கு பொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி இஷாரா ஜயரத்ன அம்மையார் ஆஜரானார், பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சந்துன் ரணசிங்க ஆஜரானார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கில் முறைப்பாட்டை வழிநடத்துகிறது.

Post a Comment

Previous Post Next Post