7 வருடங்களாக விசா இன்றி அளுத்கமவில் தங்கியிருந்தபடி இணைய மோசடிகளில் ஈடுபட்ட ரஷ்யர்

the-russian-who-has-been-in-aluthgama-without-a-visa-for-7-years-and-did-internet-trafficking

அளுத்கம, மொரகல்ல சுற்றுலா வலயத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்து இணையம் மூலம் பணம் சம்பாதித்து வந்த 35 வயது ரஷ்ய பிரஜை ஒருவரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டபூர்வமான வீசா அனுமதிப்பத்திரம் எதுவுமின்றி சுமார் ஏழு வருடங்களாக அவர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.




கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான வெளிநாட்டவரிடமிருந்து 5 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரது கடவுச்சீட்டை பரிசோதித்ததில், அவர் 2019 இல் இலங்கைக்கு வந்துள்ளதும், அதன்பின்னர் நீண்டகாலமாக வீசா இல்லாமல் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்ததாக அளுத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் சஞ்சீவ தெரிவித்தார். மேலும், சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான ரஷ்ய பிரஜை பயன்படுத்திய ஸ்மார்ட் வகை கையடக்கத் தொலைபேசி ஒன்றும், இரண்டு மடிக்கணினிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.




கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டவர் 24ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post