
சட்டவிரோதமான முறையில் கசிப்பு வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவி மற்றும் அவரது தாய் அக்கராயன்குளம் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, ஐயனார் குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் இந்த சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பல்கலைக்கழக மாணவியின் வசமிருந்த 3,750 மில்லி லீற்றர் சட்டவிரோத கசிப்பு பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த மாணவி தகாத வார்த்தைகளால் திட்டி, கலகலப்பான முறையில் நடந்துகொண்டு கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, தகாத வார்த்தைகளால் திட்டி, கலகலப்பான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் மாணவியின் தாயும் அதே இடத்தில் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.