நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை

a-motion-of-no-confidence-by-the-opposition-against-the-minister-of-justice

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பையும், கடமையையும் புறக்கணித்ததாகக் குற்றம் சாட்டி, நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று (10) நாடாளுமன்றத்தில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

Post a Comment

Previous Post Next Post